Sunday 30 June 2013

பன்னிர் மசாலா

பன்னிர் மசாலா செய்ய தேவையான பொருள்கள்

பன்னிர் - 1 கப்
பேபிகான் - 1 கப்
மைதா மாவு - 3 ஸ்பூன்
கான்பலோர் மாவு - 3 ஸ்பூன்
சோடாப்பு - சிறிது
வெங்காயம் - 1
தக்காளி - 1
கேப்சிகம் - 1
பச்சை மிளகாய் - 4
உப்பு - சிறிது
சோயா சாஸ் - 2 ஸ்பூன்
சில்லி சாஸ் - 2 ஸ்பூன்
மிளகு தூள் - 1 ஸ்பூன்

பன்னிர் மசாலா செய்ய தேவையான பொருள்கள்

செய்முறை

1. முதலில் மைதா மாவு, கான்பலோர் மாவு, சோடாப்பு ஆகியவற்றை நன்றாக கரைத்து வைக்கவேண்டும்.
2. அதில்  பன்னிர், பேபிகான் ஆகியவற்றை நனைத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.
3. பிறகு ஒரு கடாயில் எண்ணெய்  உற்றி அதில் வெங்காயம், தக்காளி, கேப்சிகம், பச்சை மிளகாய், உப்பு, சோயா சாஸ், சில்லி சாஸ், மிளகு தூள் ஆகியவற்றை போட்டு வதக்கவும்.





4. அந்த கலவையில்  பொரித்து வைத்த  பன்னிர், பேபிகான் ஆகியவற்றை போட்டு கிளரி 5 நிமிடம் அடுப்பில் வைத்து இரக்கவும்.
சுவையான  பன்னிர் மசாலா ரெடி.

பன்னிர் மசாலா

Thursday 27 June 2013

கேக் செய்வது எப்படி

தேவையான பொருள்கள்

மைதா மாவு - 1 1/2 கப்
பொடித்த சக்கரை - 1 கப்
முட்டை - 2
வெண்ணை - 1 கப்
பேக்கிங் பவுடர் - 1 ஸ்பூன்
வெண்ணிலா எசன்ஸ் - 1 ஸ்பூன்
பால் - 1 கப்




1. பொடித்த சக்கரையுடன் வெண்ணையை நன்றாக கலக்கவும். பின்பு அதில் முட்டை சேர்த்து கலக்கவும்.
2. அதில் மைதா  மாவையும் பேக்கிங் பவுடர் ஆகியவற்றையும் சேர்த்து கலக்கவும்.
3. கெட்டியாக இருந்தால்  அதில் கொஞ்சம் கொஞ்சமாக பால் சேர்த்து இட்லி மாவு பதத்துக்கு கலக்கி கொள்ளவும்.
4. கடைசியாக அதில் வெண்ணிலா  எசன்ஸ் சேர்த்து அனைத்தையும் நன்றாக கலக்கவும்.




5. இந்த கலவையை மைக்ரோ ஓவனில் 350 டிகிரி அல்லது மீடியம் சூட்டில் 10-12 நிமிஷம் வேகவைத்து எடுத்தால் சுவையான கேக் ரெடி. 

Wednesday 26 June 2013

மட்டன் பிரியாணி செய்வது எப்படி

 தேவையான பொருள்கள்

மட்டன் - 1/2 kg
பாசுமதி அரிசி - 1/2 kg
பெரிய வெங்காயம் - 3
தக்காளி - 2
பொதினா கொத்தமல்லி - 1 கட்டு
இஞ்சி பூண்டு விழுது - 2 தே.க
மஞ்சள்தூள் 1/2 தே.க
பச்சைமிளகாய் - 10
தயிர் - 1 கப்
முந்திரிபருப்பு - 2 தே.க
நெய் அல்லது எண்ணெய் - 1 கப்
பட்டை லவங்கம் பிரியாணி இலை சிறிது


அரைக்க

கசகசா - 2 தே.க
பெரும்சிரகம் - 2 தே.க
பட்டை, ஏலக்காய், கிராம்பு  - சிறிது

1. மேல்கூரிய அனைத்தையும் வாணலில் சிறிது எண்ணெய் விட்டு வதக்கி பொடி செய்து கொள்ளவும்.


மட்டன் பிரியாணி மசாலா 
2. வாணலில் நெய் உற்றி முந்திரிபருப்பு, பட்டை லவங்கம் பிரியாணி இலை ஆகியவற்றை போட்டு வதக்கி அதில் இரண்டு டம்ளர் தண்ணீர் உற்றவும். பின்பு அரைமணி நேரம் உறவைத்த அரிசியை அதில் போட்டு முக்கால் பதம் இருக்கும் போது இரக்கவும் .





3. கறியை உப்பு, மஞ்சள்தூள், தண்ணீர் விட்டு நன்றாக வேகவைத்து கொள்ளவும்.  

4. வாணலில் எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி, கொத்தமல்லி ஆகியவற்றை  வதக்கி பின்பு  அரைத்து  வைத்திருத்த மசாலா மற்றும் வேகவைத்த கறியை சேர்க்கவும்.


5. இப்போது கரியையும் அரிசியையும் கனமான பாத்திரத்தில் சேர்த்து 1 கப் கறி   வேகவைத்த தண்ணீரையும், தயிரையும்  சேர்த்து  பொதினா கொத்தமல்லி போட்டு மூடி தம் போடவும். 20  நிமிசத்தில் சுவையான மட்டன் பிரியாணி ரெடி.