Tuesday 21 May 2013

கோடையில் வீட்டை குளிர்ச்சியாக வைத்திட சில டிப்ஸ்


1. அகல மண் சட்டி அல்லது பிளாஸ்டிக் டபிள் தண்ணீரை வைத்து வீட்டிற்குள் வைத்தால் அந்த அறையில் இருக்கும் சூடான காற்றை நீர் உறிந்து கொண்டு குளுமையான காற்றை வெளிபடுத்தும்.


2. அந்த தண்ணீரில் சிறிது வெட்டி வேரை போட்டால் காற்று வாசனையாகவும்   குளிர்ச்சியாகவும் இருக்கும்.

3. வெட்டி வேரை தட்டி போல செய்து நனைத்து ஜன்னலில் தொங்க விட்டால் உள்ளே வரும் காற்று குளிர்ச்சியாக இருக்கும்.

4. நேரடியாக வெயில் அறைக்குள் வராமல் ஜன்னலை  முடவும். திறத்து இருக்கும் பொது நனைத்த போர்வை அல்லது கனமான துணியை அதில் போடவும் அறைக்குள் சூடான  காற்று வருவதை இது தடுக்க உதவும்.

5.ஈரமான துணியை அறை உள்ளைய உலர்த்தலாம்.

6. இரவில் படுக்கும் முன்பு கட்டிலுக்கு கிழும் தரையிலும் தண்ணீரை தெளித்து விட்டு  தூங்கலாம் 

Sunday 19 May 2013

செட்டிநாடு கார குழம்பு

செட்டிநாடு கார குழம்பு செய்ய தேவையான பொருகள்

மசாலா

துவரம் பருப்பு 1 தே.க
கடலை பருப்பு  1 தே.க
உள்ளுத பருப்பு  1 தே.க
மல்லி 1 தே.க
கசகசா 1 தே.க
வெந்தியம் 1 தே.க
காய்த்த சிவப்பு மிளகாய் 5-6
பெருகாயம் 1/2 தே.க
 பட்டை சிறிது

தாளிக்க

நல்ல எண்ணெய் 1 கப்
கடுகு சிறிது

குழம்புக்கு

கத்திரிக்காய் 1/4 கிலோ
புளி 1 எல்லுமிச்சை அளவு
தேங்காய் பால் 1 கப்
சின்னவெங்காயம் 1 கப்
வெல்லம் சிறிது
மஞ்சள் தூள் சிறிது
உப்பு தேவைகேற்ப



1.மேற்கூரிய மசாலா அனைத்தையும் எண்ணெய் இல்லாமல் வாணலில்போட்டு வதக்கி, ஆறியவுடன் மிச்சியில் போட்டு அரைத்து  கொள்ளவும். புளியை கரைத்து வைத்து கொள்ளவும்.

2.வாணலில் எண்ணெய் உட்றி கடுகை தாளித்து, சின்னவெங்காயம் மற்றும் கத்திரிக்காய் ஆகியவற்றை வதக்கி கொள்ளவும்.

3. இதில் புளி தண்ணியை சேர்த்து கொதிக்க விடவும். ஒரு கொதி வந்தவுடன் அரைத்த மசாலா கலவை மற்றும் உப்பை போடவும்.

4. பின்பு தேங்காய் பாலை சேர்த்து 10-15 நிமிடம் கொதிக்க வைக்கவும்.

5. இரக்கும் முன்பு சிறிது வெள்ளம் சேர்க்கவும். சுவையான காரக்குழம்பு ரெடி.

செட்டிநாடு கார குழம்பு 

இதில் கத்திரிக்காய்கு பதில் மாங்காய்/வெண்டைக்காய் சேர்க்கலாம். 

ரங்கோலி கோலம்

 பூ கோலம் 1


 பூ கோலம் 2


சிக்கன் லெக் பீஸ் வறுவல்

சிக்கன் லெக் பீஸ் வறுவல் செய்ய தேவையான பொருள்கள்

சிக்கன் 1/2 கிலோ
மிளகாய் தூள் 2 தே.க
மல்லிதூள் 1 1/2   தே.க
மிளகு 2 தே.க
முட்டை வெள்ளைகரு 1
எலுமிச்சை 1
அரிசிமாவு 2 தே.க
தயிர் அரை கப்
உப்பு சிறிது
எண்ணை தேவையேற்ப



1. மிளகாய் தூள், மல்லிதூள், மிளகு 2 தே.க, முட்டை வெள்ளைகரு, எலுமிச்சை, அரிசிமாவு, தயிர் அரை கப், உப்பு அனைத்தையும்  சிக்கனுடன் சேர்த்து பிசைத்து 2 மணிநேரம் பிரீசரில் வைக்கவேண்டும்.
2. பின்பு எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும். சுவையான மொருமொரு சிக்கன் லெக் பீஸ் வறுவல் ரெடி.


Saturday 18 May 2013

வணக்கம்! வணக்கம்! வணக்கம்!


அனைவரையும் எனது புதிய வலைபூவிற்கு வரவேற்கிறேன். 

நன்றி