Tuesday 21 May 2013

கோடையில் வீட்டை குளிர்ச்சியாக வைத்திட சில டிப்ஸ்


1. அகல மண் சட்டி அல்லது பிளாஸ்டிக் டபிள் தண்ணீரை வைத்து வீட்டிற்குள் வைத்தால் அந்த அறையில் இருக்கும் சூடான காற்றை நீர் உறிந்து கொண்டு குளுமையான காற்றை வெளிபடுத்தும்.


2. அந்த தண்ணீரில் சிறிது வெட்டி வேரை போட்டால் காற்று வாசனையாகவும்   குளிர்ச்சியாகவும் இருக்கும்.

3. வெட்டி வேரை தட்டி போல செய்து நனைத்து ஜன்னலில் தொங்க விட்டால் உள்ளே வரும் காற்று குளிர்ச்சியாக இருக்கும்.

4. நேரடியாக வெயில் அறைக்குள் வராமல் ஜன்னலை  முடவும். திறத்து இருக்கும் பொது நனைத்த போர்வை அல்லது கனமான துணியை அதில் போடவும் அறைக்குள் சூடான  காற்று வருவதை இது தடுக்க உதவும்.

5.ஈரமான துணியை அறை உள்ளைய உலர்த்தலாம்.

6. இரவில் படுக்கும் முன்பு கட்டிலுக்கு கிழும் தரையிலும் தண்ணீரை தெளித்து விட்டு  தூங்கலாம் 

No comments:

Post a Comment