Thursday 11 July 2013

கோபி மஞ்சுரியன்

கோபி மஞ்சுரியன் செய்ய தேவையான பொருள்கள்

காலிபிளவர் - 1
மைதா மாவு - 3 ஸ்பூன்
கான்பிளவர் மாவு - 2 ஸ்பூன்
வெங்காயம் - 1
காப்சிகம் - 1
பூண்டு - 6
மிளகுதூள்  - 1 ஸ்பூன்
சோயா சாஸ் - 2 ஸ்பூன்
சில்லி சாஸ் - 2 ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப





1. முதலில் காலிபிளவரை மிளகுதூள் மற்றும் உப்பு சேர்த்து வேக வைக்கவேண்டும்.
2. பின்பு மைதா மாவு, கான்பிளவர் மாவு உப்பு ஆகியவற்றை தண்ணீர் விட்டு பிசைத்து அதில் காலிபிளவரை நனைத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.


 


3. ஒரு வாணலில் எண்ணெய் விட்டு அதில் வெங்காயம், பூண்டு,  காப்சிகம், மிளகுதூள்,  சோயா சாஸ்,  சில்லி சாஸ் ஆகியவற்றை போட்டு வதக்கி சிறுது உப்பு சேர்க்கவும்.


                         










4. அதில் வறுத்து வைத்திருத்த காலிபிளவரை போட்டு பிரட்டினால் சுவையான கோபி மஞ்சுரியன் ரெடி. 

Wednesday 3 July 2013

சிக்கன் பர்கர் விட்டில் செய்யலாம்

சிக்கன் பர்கர் விட்டில் உள்ள பொருள்களை வைத்து எளிமையாக செய்யலாம்

தேவையான பொருள்கள் 

சிக்கன் - 1/2 கிலோ 
பெரிய வெங்காயம் - 1
இஞ்சி புண்டு விழுது - 1 ஸ்பூன் 
ஓமம் - 1/2 ஸ்பூன் 
மிளகுதூள் - 1 ஸ்பூன் 
சோயா சாஸ் - 1 ஸ்பூன் 
உப்பு 


1. சிக்கனையும் வெங்காயத்தையும் தனி தனியாக அரைக்க வேண்டும். பின்பு அனைத்தையும் சேர்த்து பிசைய வேண்டும்.
2. இந்த கலவையை அரை மணி நேரம் பிரிச்சில்  வைக்கவேண்டும்.






நனைத்து எடுக்க

மூட்டை - 1
மைதா மாவு - 2 ஸ்பூன் 
அரிசி மாவு - 2 ஸ்பூன் 
பேகிங் பவுடர் - சிறிது 
உப்பு 


இவை அனைத்தையும் நன்றாக அடித்து வைத்து கொள்ளவேண்டும்.

பிரட்  தூள் - 1கப் 



சிக்கன் கலவையை இதில் முக்கி எடுத்து கட்லெட் போல் செய்து ஒரு கடாயில் பொரித்து எடுக்க வேண்டும்




பின்பு இதனை பண்ணில் நடுவில் வைத்து கோஸ், காரட், சிஸ் வைத்து இரண்டு நிமிடம்  மைக்ரோ ஒவெனில் சுடவைத்தால் சுவையான சிக்கன் பர்கர் ரெடி 



சிக்கன் பர்கர்













Tuesday 2 July 2013

சிக்கன் பிரியாணி செய்வது எப்படி

சிக்கன் பிரியாணி  செய்ய தேவையான பொருள்கள்

சிக்கன் - 1/2 கிலோ 
தயிர் - 1/2 கப் 
பொதினா கொத்தமல்லி - 2 ஸ்பூன் 
இஞ்சி  பூண்டு விழுது - 2 ஸ்பூன் 
பச்சைமிளகாய் - 4
கரம் மசாலா - 2 ஸ்பூன் 
மிளகாய் தூள் - 2 ஸ்பூன் 
எலுமிச்சை பழ சாரு - 1 ஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன் 



இவை அனைத்தையும் நன்றாக பிசைத்து 1 மணிநேரம் உரவைக்கவேண்டும்.


சிக்கன் மசாலா 


பாசுமதி அரிசி - 1/2  கிலோ 
பட்டை, லவங்கம், பிரியாணி இலை - சிறிது
எண்ணெய் - 1/2 கப்
நெய் - 1/2 கப்
வெங்காயம் - 3
தக்காளி - 2
பொதினா கொத்தமல்லி - 1 கப்




1. எண்ணெய் மற்றும் நெய்யை உற்றி அதில் பட்டை, லவங்கம், பிரியாணி இலை  ஆகியவற்றை கடாயில் போட்டு வதக்கி அதில் இரண்டு கப் தண்ணீர் உற்றி அரிசியை போடவும். பாதி வெந்தவுடன் இரக்கவும்.
2.  ஒரு கடாயில் எண்ணெய் உற்றி அதில் வெங்காயம், தக்காளி, பொதினா, கொத்தமல்லி ஆகியவற்றை  போடு வதக்கி மசாலாவில் பிசைத்து வைத்திருத்த சிக்கனை போட்டு பிரட்டி எண்ணெய் பிரியும் வரை அடுப்பில் வைக்கவும்.
3. பின்பு வேகவைதிருந்த அரிசியையும் சிக்கனையும் சேர்த்து ஒன்றை கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் மிதமான சூட்டில் தம் வைக்க வேண்டும்.
சுவையான சிக்கென் பிரியாணி ரெடி.

சிக்கென் பிரியாணி


  

Sunday 30 June 2013

பன்னிர் மசாலா

பன்னிர் மசாலா செய்ய தேவையான பொருள்கள்

பன்னிர் - 1 கப்
பேபிகான் - 1 கப்
மைதா மாவு - 3 ஸ்பூன்
கான்பலோர் மாவு - 3 ஸ்பூன்
சோடாப்பு - சிறிது
வெங்காயம் - 1
தக்காளி - 1
கேப்சிகம் - 1
பச்சை மிளகாய் - 4
உப்பு - சிறிது
சோயா சாஸ் - 2 ஸ்பூன்
சில்லி சாஸ் - 2 ஸ்பூன்
மிளகு தூள் - 1 ஸ்பூன்

பன்னிர் மசாலா செய்ய தேவையான பொருள்கள்

செய்முறை

1. முதலில் மைதா மாவு, கான்பலோர் மாவு, சோடாப்பு ஆகியவற்றை நன்றாக கரைத்து வைக்கவேண்டும்.
2. அதில்  பன்னிர், பேபிகான் ஆகியவற்றை நனைத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.
3. பிறகு ஒரு கடாயில் எண்ணெய்  உற்றி அதில் வெங்காயம், தக்காளி, கேப்சிகம், பச்சை மிளகாய், உப்பு, சோயா சாஸ், சில்லி சாஸ், மிளகு தூள் ஆகியவற்றை போட்டு வதக்கவும்.





4. அந்த கலவையில்  பொரித்து வைத்த  பன்னிர், பேபிகான் ஆகியவற்றை போட்டு கிளரி 5 நிமிடம் அடுப்பில் வைத்து இரக்கவும்.
சுவையான  பன்னிர் மசாலா ரெடி.

பன்னிர் மசாலா

Thursday 27 June 2013

கேக் செய்வது எப்படி

தேவையான பொருள்கள்

மைதா மாவு - 1 1/2 கப்
பொடித்த சக்கரை - 1 கப்
முட்டை - 2
வெண்ணை - 1 கப்
பேக்கிங் பவுடர் - 1 ஸ்பூன்
வெண்ணிலா எசன்ஸ் - 1 ஸ்பூன்
பால் - 1 கப்




1. பொடித்த சக்கரையுடன் வெண்ணையை நன்றாக கலக்கவும். பின்பு அதில் முட்டை சேர்த்து கலக்கவும்.
2. அதில் மைதா  மாவையும் பேக்கிங் பவுடர் ஆகியவற்றையும் சேர்த்து கலக்கவும்.
3. கெட்டியாக இருந்தால்  அதில் கொஞ்சம் கொஞ்சமாக பால் சேர்த்து இட்லி மாவு பதத்துக்கு கலக்கி கொள்ளவும்.
4. கடைசியாக அதில் வெண்ணிலா  எசன்ஸ் சேர்த்து அனைத்தையும் நன்றாக கலக்கவும்.




5. இந்த கலவையை மைக்ரோ ஓவனில் 350 டிகிரி அல்லது மீடியம் சூட்டில் 10-12 நிமிஷம் வேகவைத்து எடுத்தால் சுவையான கேக் ரெடி. 

Wednesday 26 June 2013

மட்டன் பிரியாணி செய்வது எப்படி

 தேவையான பொருள்கள்

மட்டன் - 1/2 kg
பாசுமதி அரிசி - 1/2 kg
பெரிய வெங்காயம் - 3
தக்காளி - 2
பொதினா கொத்தமல்லி - 1 கட்டு
இஞ்சி பூண்டு விழுது - 2 தே.க
மஞ்சள்தூள் 1/2 தே.க
பச்சைமிளகாய் - 10
தயிர் - 1 கப்
முந்திரிபருப்பு - 2 தே.க
நெய் அல்லது எண்ணெய் - 1 கப்
பட்டை லவங்கம் பிரியாணி இலை சிறிது


அரைக்க

கசகசா - 2 தே.க
பெரும்சிரகம் - 2 தே.க
பட்டை, ஏலக்காய், கிராம்பு  - சிறிது

1. மேல்கூரிய அனைத்தையும் வாணலில் சிறிது எண்ணெய் விட்டு வதக்கி பொடி செய்து கொள்ளவும்.


மட்டன் பிரியாணி மசாலா 
2. வாணலில் நெய் உற்றி முந்திரிபருப்பு, பட்டை லவங்கம் பிரியாணி இலை ஆகியவற்றை போட்டு வதக்கி அதில் இரண்டு டம்ளர் தண்ணீர் உற்றவும். பின்பு அரைமணி நேரம் உறவைத்த அரிசியை அதில் போட்டு முக்கால் பதம் இருக்கும் போது இரக்கவும் .





3. கறியை உப்பு, மஞ்சள்தூள், தண்ணீர் விட்டு நன்றாக வேகவைத்து கொள்ளவும்.  

4. வாணலில் எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி, கொத்தமல்லி ஆகியவற்றை  வதக்கி பின்பு  அரைத்து  வைத்திருத்த மசாலா மற்றும் வேகவைத்த கறியை சேர்க்கவும்.


5. இப்போது கரியையும் அரிசியையும் கனமான பாத்திரத்தில் சேர்த்து 1 கப் கறி   வேகவைத்த தண்ணீரையும், தயிரையும்  சேர்த்து  பொதினா கொத்தமல்லி போட்டு மூடி தம் போடவும். 20  நிமிசத்தில் சுவையான மட்டன் பிரியாணி ரெடி. 












Tuesday 21 May 2013

கோடையில் வீட்டை குளிர்ச்சியாக வைத்திட சில டிப்ஸ்


1. அகல மண் சட்டி அல்லது பிளாஸ்டிக் டபிள் தண்ணீரை வைத்து வீட்டிற்குள் வைத்தால் அந்த அறையில் இருக்கும் சூடான காற்றை நீர் உறிந்து கொண்டு குளுமையான காற்றை வெளிபடுத்தும்.


2. அந்த தண்ணீரில் சிறிது வெட்டி வேரை போட்டால் காற்று வாசனையாகவும்   குளிர்ச்சியாகவும் இருக்கும்.

3. வெட்டி வேரை தட்டி போல செய்து நனைத்து ஜன்னலில் தொங்க விட்டால் உள்ளே வரும் காற்று குளிர்ச்சியாக இருக்கும்.

4. நேரடியாக வெயில் அறைக்குள் வராமல் ஜன்னலை  முடவும். திறத்து இருக்கும் பொது நனைத்த போர்வை அல்லது கனமான துணியை அதில் போடவும் அறைக்குள் சூடான  காற்று வருவதை இது தடுக்க உதவும்.

5.ஈரமான துணியை அறை உள்ளைய உலர்த்தலாம்.

6. இரவில் படுக்கும் முன்பு கட்டிலுக்கு கிழும் தரையிலும் தண்ணீரை தெளித்து விட்டு  தூங்கலாம் 

Sunday 19 May 2013

செட்டிநாடு கார குழம்பு

செட்டிநாடு கார குழம்பு செய்ய தேவையான பொருகள்

மசாலா

துவரம் பருப்பு 1 தே.க
கடலை பருப்பு  1 தே.க
உள்ளுத பருப்பு  1 தே.க
மல்லி 1 தே.க
கசகசா 1 தே.க
வெந்தியம் 1 தே.க
காய்த்த சிவப்பு மிளகாய் 5-6
பெருகாயம் 1/2 தே.க
 பட்டை சிறிது

தாளிக்க

நல்ல எண்ணெய் 1 கப்
கடுகு சிறிது

குழம்புக்கு

கத்திரிக்காய் 1/4 கிலோ
புளி 1 எல்லுமிச்சை அளவு
தேங்காய் பால் 1 கப்
சின்னவெங்காயம் 1 கப்
வெல்லம் சிறிது
மஞ்சள் தூள் சிறிது
உப்பு தேவைகேற்ப



1.மேற்கூரிய மசாலா அனைத்தையும் எண்ணெய் இல்லாமல் வாணலில்போட்டு வதக்கி, ஆறியவுடன் மிச்சியில் போட்டு அரைத்து  கொள்ளவும். புளியை கரைத்து வைத்து கொள்ளவும்.

2.வாணலில் எண்ணெய் உட்றி கடுகை தாளித்து, சின்னவெங்காயம் மற்றும் கத்திரிக்காய் ஆகியவற்றை வதக்கி கொள்ளவும்.

3. இதில் புளி தண்ணியை சேர்த்து கொதிக்க விடவும். ஒரு கொதி வந்தவுடன் அரைத்த மசாலா கலவை மற்றும் உப்பை போடவும்.

4. பின்பு தேங்காய் பாலை சேர்த்து 10-15 நிமிடம் கொதிக்க வைக்கவும்.

5. இரக்கும் முன்பு சிறிது வெள்ளம் சேர்க்கவும். சுவையான காரக்குழம்பு ரெடி.

செட்டிநாடு கார குழம்பு 

இதில் கத்திரிக்காய்கு பதில் மாங்காய்/வெண்டைக்காய் சேர்க்கலாம். 

ரங்கோலி கோலம்

 பூ கோலம் 1


 பூ கோலம் 2


சிக்கன் லெக் பீஸ் வறுவல்

சிக்கன் லெக் பீஸ் வறுவல் செய்ய தேவையான பொருள்கள்

சிக்கன் 1/2 கிலோ
மிளகாய் தூள் 2 தே.க
மல்லிதூள் 1 1/2   தே.க
மிளகு 2 தே.க
முட்டை வெள்ளைகரு 1
எலுமிச்சை 1
அரிசிமாவு 2 தே.க
தயிர் அரை கப்
உப்பு சிறிது
எண்ணை தேவையேற்ப



1. மிளகாய் தூள், மல்லிதூள், மிளகு 2 தே.க, முட்டை வெள்ளைகரு, எலுமிச்சை, அரிசிமாவு, தயிர் அரை கப், உப்பு அனைத்தையும்  சிக்கனுடன் சேர்த்து பிசைத்து 2 மணிநேரம் பிரீசரில் வைக்கவேண்டும்.
2. பின்பு எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும். சுவையான மொருமொரு சிக்கன் லெக் பீஸ் வறுவல் ரெடி.


Saturday 18 May 2013

வணக்கம்! வணக்கம்! வணக்கம்!


அனைவரையும் எனது புதிய வலைபூவிற்கு வரவேற்கிறேன். 

நன்றி